/indian-express-tamil/media/media_files/0eb5c81mYlg762dn8XT5.jpg)
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தின் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்தார்.
Actor Vijay | Lok Sabha Election 2024:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வாக்கு செலுத்தினார். 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வந்திருந்தார் விஜய். அவர் கறுப்பு-சிவப்பு நிற சைக்கிளில் அவர் வந்து சென்றது சினிமா வட்டாரம் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியது.
கையில் காயம் - பேண்டேஜ் ஒட்டியபடி வந்த விஜய்
இந்த நிலையில், இம்முறை மக்களவைத் தேர்தலுக்கு அவர் வித்யாசமான முறையில் வாக்களிக்க வருவாரா எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், விஜய் இம்முறை காரில் வந்தார். வெள்ளை நிற சட்டை அணிந்து வந்த அவர், ரசிகர்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு வந்து வாக்கு செலுத்தினார். கையில் சிறிய அளவிலான காயத்துக்கு பேண்டேஜ் ஒட்டியபடி விஜய் வந்திருந்தார்.
ஓட்டு போட ரஷ்யாவில் இருந்து வந்த விஜய்
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தின் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, விஜய் விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்றார். விஜய்யின் வருகையால், நீலாங்கரை வாக்குச்சாவடியே பரபரப்பாக மாறியது. விஜய்யைக் காண ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
As usual, surrounded by a huge crowd and media folks, @actorvijay exercised his democratic duty #LokSabaElections2024pic.twitter.com/Jo2XToxtbZ
— Rajasekar (@sekartweets) April 19, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.