தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் குறித்து சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் தளபதி விஜய். இயக்குனரும் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமான இவர், நடிப்பில் மீதுள்ள திறமையின் காரணமாக தற்போது தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறியுள்ளார்.
1984-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகான அறிமுகமானார். தொடர்ந்து அப்பாவின் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில பிரபலமாக உதவிய படம் பூவே உனக்காக.
அதன்பிறகு ரசிகர்கள் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், பெண்கள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களையும், வசூலில் சாதனை படைத்த படங்களையும் கொடுத்த விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே விஜய் சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களுக்ககாக வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஷமீர் ஏ.ஜே என்ற யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில் காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் விஜய் இன்னைக்கு நிறைய இடத்துக்கு போக வேண்டி இருக்கு உங்களையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போறேன. அதுக்குள்ள கொஞ்சம் டைம் கொடுங்க ரெடி ஆகிட்டு வந்துடுரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்
அதன்பிறகு ரெடியாகி வரும் விஜய், உடற்பயிற்சி செய்கிறார். அப்போது நரு நடிகனுக்கு பிட்னஸ் ரொம்ப முக்கியம். டெய்லி இல்லை என்றாலும் ஷூட்டிங் இல்லாதப்போ இந்த மாதிரி கொஞ்சம் எக்சசைஸ் செய்ய வேண்டும். பிரியமுடன் படப்பிடிப்பு நடந்தபோது எனக்கு ஒரு பிரச்சினை வந்தது. அன்றுமுதல் டாக்டர் என்னை அதிக வெயிட் தூக்காதீங்க என்று சொன்னார். அதனால் இந்த மாதிரி சின்ன சின்ன எக்சசைஸ் பண்ணிக்கிறது என்று சொல்கிறார்.
தொடர்ந்து ரொடியாகிவிட்டு டைனிங் ஹாலில் அமர்ந்து நியூஸ் பேப்பர் கேட்கிறார். அதை கொண்டு வருபவரை இவர் ஷிவா என் ப்ரண்டு. இந்த வீடு இவ்வளவு சுத்தமாக இருக்கு என்றால் அதற்கு இவர்தான் காரணம். அதேபோல் காலை எழுந்தவுடன் பேப்பர் படிக்க வேண்டும். எனக்கும் காலையில் எழுந்த உடனே பேப்பர் பார்த்துடனும். இல்லனா நமக்கு ஒன்னும் ஓடாது.
சம் டைம்ஸ் நைட் ஷூட்டிங் நடக்கும்போது காலையில 3 மணி அல்லது 4 மணிக்கு வந்து படுப்பேன். அப்போது 6 மணிக்கு அலாரம் வச்சி எழுந்திருச்சி பேப்பர் படிச்சிட்டு திரும்பவும் தூங்கிடுவேன். அது தனி சுவாரஸ்யம். அதன்பிறகு டிபன் ரெடியாக என்று கேட்க, விஜய் மனைவி டிபன் கொண்டு வருகிறார். இவர்தான் எனது மனைவி சங்கீதா உஙகளுக்கு தெரிஞ்சிருக்கும் என்று சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து இன்னைக்கு என்ன டிபன் என்று கேட்க இட்லி என்று சங்கீதா சொல்கிறார். அதற்கு விஜய் எனக்கு இன்னைக்கு தோசை சாப்பிடனும்போல இருக்கு என்று சொலல் உடனே ரெடி பண்ணவா என்று சங்கீதா கேட்கிறார். அதற்கு விஜய் நானே செய்றேன் என்று சொல்லி தோசை சுட்டு சாப்பிடுகிறார். அதனைத் தொடர்ந்து படம் குறித்து பேசும் விஜய் அனைத்து படங்களையும் பார்ப்பேன். ஆனால் விரும்பி பார்ப்பது ஆக்ஷன் படம்தான் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil