அட, சங்கீதா சொல்லியும் விஜய் கேட்கலையாமே..! த்ரோபேக் வீடியோ வைரல்

Actor Vijay loves non veg food trending throwback video viral: தான் விரும்பிய உணவுக்காக குடும்ப விதிகளை மீறியதை, ஒரு மாஸ் ஹீரோ வெளிப்படையாக சொல்வதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்ற்னர்.

Actor Vijay loves non veg food trending throwback video viral: தான் விரும்பிய உணவுக்காக குடும்ப விதிகளை மீறியதை, ஒரு மாஸ் ஹீரோ வெளிப்படையாக சொல்வதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்ற்னர்.

author-image
WebDesk
New Update
அட, சங்கீதா சொல்லியும் விஜய் கேட்கலையாமே..! த்ரோபேக் வீடியோ வைரல்

தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். நம் எல்லோருக்கும் தெரியும் விஜய் மிகவும் அமைதியானவர் என்று. திரையில் ஆக்ரோஷமாக எதிரிகளை துவம்சம் செய்யும் துடிதுடிப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர், திரை வெளியே அதற்கு நேர்மாறாக, மென்மையாக, மிக இயல்பாக பேசும் குணமுடையவராக அறியப்படுகிறார். மேலும், விஜய் எப்போதும் தன் பெற்றோர் பேச்சை மதித்து வந்துள்ளதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் இணையத்தில் வைரலாகிவிட்ட ஒரு த்ரோபேக் வீடியோ, விஜய் தான் மிகவும் விரும்பிய ஒன்றுக்காக, தன் குடும்பத்தினர் விதித்த விதிகளை மீறியதாகக் கூறுகிறது.

இணையத்தில் வைரலான விஜய்யின் வீடியோவில் அவர், எனக்கு பொதுவாக அசைவ உணவுகள் தான் ரொம்ப பிடிக்கும். ஆனால், கொஞ்ச நாட்களாக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சைவ சாப்பாடு தான் என எங்கள் வீட்டில் ரூல் போட்டுருங்காங்க. அதனால் அந்த ரெண்டு நாள் மட்டும் நான் சூட்டிங்கில் சாப்பிட்டுருவேன். என நடிகர் விஜய் பேசியுள்ளார். இதன் மூலம், அவர் அசைவ உணவுகளை ஒரு நாளும் தவறவிட்டதில்லை என்று தெரிகிறது.

publive-image

Advertisment
Advertisements

தான் விரும்பிய உணவுக்காக குடும்ப விதிகளை மீறியதை, ஒரு மாஸ் ஹீரோ வெளிப்படையாக சொல்வதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்ற்னர்.

இந்த ஆண்டு ஹிட் படமான 'மாஸ்டர்' மாஸ்டர் படத்திற்கு பின்னர், விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த புதிய திரில்லர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: