மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்: வைரலான ட்விட்

நடிகர் விஜய் #GreenIndiaChallenge : மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக. வளமை, ஆரோக்கிய இந்தியாவுக்கான வழிகள் இங்கே.

நடிகர் விஜய் #GreenIndiaChallenge : மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக. வளமை, ஆரோக்கிய இந்தியாவுக்கான வழிகள் இங்கே.

author-image
WebDesk
New Update
நடிகர் விஜய் #GreenIndiaChallenge

நடிகர் விஜய் #GreenIndiaChallenge

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு இன்று  தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  Twitter மற்றும் Facebook-ல்  #HappyBirthdayMaheshbabu என்ற ஹேஸ்டேக் இன்று முழுதும்  ட்ரெண்ட் ஆகி கொண்டிருந்தது.

Advertisment

மேலும், தனது பிறந்த நாளான இன்று மகேஷ் பாபு மரக்கன்று ஒன்றை நட்டு #GreenIndiaChallenge-ல் பங்கேற்றார்.

#GreenIndiaChallenge என்றால், மரக்கன்றை ஒருவர் நட்டு, 3 பேரை மரக்கன்றை நட செய்ய சவால் விடுக்க வேண்டும்.

நடிகர் மகேஷ் பாபு , தனது சவாலை  ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுத்தார். மேலும், தனது ட்விட்டரில் "எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது. இந்த சவால்  எல்லைகளைக் கடந்து தொடரட்டும். நீங்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். பசுமையான உலத்தை நோக்கி மேலும் ஒரு அடி” என்றும் பதிவு செய்தார்.

Advertisment
Advertisements

சவாலை ஏற்ற நடிகர் விஜய்:  

 

நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை நடிகர் விஜய் முடித்து வைத்துள்ளார். மகேஷ் பாபுவின் சவாலுக்கிணங்க மரக்கன்றை நட்ட விஜய்," மகேஷ் பாபு காரு இது உங்களுக்கு. வளமை, ஆரோக்கிய இந்தியாவுக்கான வழிகள் இங்கே. நன்றி" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

 

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: