விஜய் ரசிகர்களுக்கு இரண்டு பொங்கல் கொண்டாட்டம்; மாஸ்டர் 2வது போஸ்டர் வெளியீடு
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி விஜய்யின் மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு இரண்டு பொங்கல் கொண்டாட்டமாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கைதி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை அளித்த இயக்குனர் லோகேஷ் உடன் நடிகர் விஜய் இணைந்தார்.
Advertisment
Advertisements
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்துக்கு தளபதி 64 என்று பெயரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அண்மையில், விஜய் நடிக்கும் தளபதி 64 படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனேயே அதை விஜய் ரசிகர்கள் டுவிட்டரிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பி கொண்டாடத்தொடங்கிவிட்டனர். இதனால், மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்ரெண்ட் செய்யப்பட்டு சில மணிநேரங்களிலேயே 1 மில்லினுக்கு மேல் பதிவிடப்பட்டு வைரல் ஆனது.
இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். அதோடு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். எக்ஸ்பி ஃபில்ம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கின்றனர்.
மாஸ்டர் படத்தில், விஜய் - விஜய் சேதுபதி சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அண்மையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிவமோகாவில் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் டுவிட்டர் வைரல் ஆனது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
போஸ்டர் வெளியானதிலிருந்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இதனால், விஜய் ரசிகர்கலுக்கு பொங்கல் நாளில் இரண்டு பொங்கல் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.