/tamil-ie/media/media_files/uploads/2019/01/actor-vijay-mother-shobha-chandrasekar.jpg)
actor vijay mother shobha chandrasekar, ஷோபா சந்திரசேகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தளபதி விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
ரஜினிகாந்த் - ஷோபா சந்திரசேகர் வைரல் புகைப்படம்
சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சஞ்சய் இல்ல திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதே நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தாயாரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகரும் கலந்துக்கொண்டார்.
HQ pic of #Thalaivar with #ShobhaChandrasekharpic.twitter.com/iK0c1Ynmls
— Premkumar R (@premkumar_rpk) 21 January 2019
பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமண விழாவில், இருவரும் சந்தித்து ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், இந்த படத்தில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.