/tamil-ie/media/media_files/uploads/2019/02/vijay-song-in-school-book.jpg)
vijay song in school book, நடிகர் விஜய்
தமிழக அரசின் பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிரபல படத்தின் பாடல் இடம் பெற்றுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு 6 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரசிகர்களாக உள்ளார்கள். தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
பள்ளிப் புத்தகத்தில் நடிகர் விஜய் பாடல்
இவர்கள் விஜயை பற்றி சிறிய தகவல் வெளியாகினால் கூட அதனை கோலாகலமாக கொண்டாடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போதும் அப்படி தான் தமிழக அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தின் பாடலான முன்னாள் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்த பாடலை கவிஞர் வாலி எழுத ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி பாட புத்தகத்தில் இந்த பாடல் இருப்பது விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, பள்ளி மாணவர்களுக்கும் செம்ம ஜாலியாக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.