/indian-express-tamil/media/media_files/2024/12/19/aUlYeQHmA3bFAY1fzhJm.jpg)
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நீண்ட நாள் நண்பர், காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த டிச.12-ம் தேதி திருமணம் செய்தார்.
கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆண்டனி தட்டில் துபாயில் தொழிலதிபராக உள்ளார். இந்து, கிறிஸ்துவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலனாது. இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். பட்டு வேட்டி சட்டையுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "எங்கள் கனவு திருமணத்தில் எங்களின் கனவு நபர் ஆசீர்வதித்தபோது! அன்புடன் உங்கள் நண்பி, நண்பன்" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
When our dream icon blessed us at our dream weddinggg! @actorvijay sir 🤗❤️
— Keerthy Suresh (@KeerthyOfficial) December 18, 2024
With love,
Your Nanbi and Nanban#ForTheLoveOfNykepic.twitter.com/Fpwk2sBVxS
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.