தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவான தளபதி விஜய், தனது மகளின் ஆட்டத்தை ஓரமாக நின்று ரசிக்கும் புகைப்படம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் அடுத்த ’சூப்பர் ஸ்டார்’ என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் தான் தளபதி விஜய். இளைய தளபதியான விஜய், மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு தளபதியாக மாறியுள்ளார். சமீபத்தில் ரீலிசான விஜய்யின் மெர்சல் திரைப்படம் ஏகப்பட்ட சாதனைகளை செய்துவிட்டு சென்றது. வசூல் சாதனை, பாக்ஸ் ஆஃபிஸ் இட், சர்ச்சைகள் என மெர்சல் திரைப்படம் உலகளவில் பிரபலமானது.
இந்நிலையில், இந்த வெற்றிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் ரொம்பவும் சைலண்டாக இருக்கும் விஜய், சமீபத்தில் தனது மகள் கலந்துக் கொண்ட விளையாட்டு போட்டிக்கு சென்று, கூட்டத்தில் ஒருவராக நின்று அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். சினிமாவில் எவ்வளவு மாஸ் ஹீரோவாக இருந்தாலும், குடும்பம் என்று வரும் போது நான் மிகவும் சாதாரணமான மனிஷன் தான் என்று விஜய் அடிக்கடி கூறுவார்.
அதை மீண்டும் நிரூப்பிக்கும் வகையில், தனது மகள் திவ்யா கலந்துக் கொண்ட விளையாட்டு போட்டி ஒன்றுக்கும் நேரில் சென்று, பார்வையாளர்கள் இருக்கையில் கடைசி ரோவில் அமர்ந்துக் கொண்டு ரசித்துள்ளார். அத்துடன், திவ்யாயை ஊக்கப்படுத்துய்ம் வகையில் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/03/3-300x212.png)
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய்யை இறுதியாக தனது மகள் திவ்யாவை தெறி படத்தில் இறுதிக் காட்சிகள் அறிமுகப்படுத்திருந்தார். அதன் பின்பு, திவ்யா குறித்த எந்த தகவலும் சினிமாவில் கசியவில்லை. இந்நிலையில், தற்போது திவ்யாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதேப்போல், விஜய்யின் மூத்த மகன் சஞ்சய்யும் தற்போது வளர்ந்து விட்டார். அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி - கமலுக்கு அடுத்து இரண்டு பெரிய மாஸ் ஹீரோக்கள் ஆன, அஜித்- விஜய் இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் எப்போதுமே பெஸ்ட் ஃபாதராகவே இருக்கிறார்கள் என்பது இதுவும் ஒரு சான்று தான்.