இதனால் தான் இவர் மக்கள் செல்வன்... விஜய் சேதுபதி மனசு யாருக்கு வரும்

சினிமா குடும்பப் பின்னணி எதுவும் இல்லாமல் தனது நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. திரைத்துறையில் 25 படங்களைக் கடந்திருக்கும் விஜய் சேதுபதி வருடத்துக்கு 7 படங்கள் வரை நடித்திருக்கிறார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் சீதக்காதி, செக்கச் சிவந்த வானம், பேட்ட, 96 ஆகிய படங்கள் வெளியாகின. இதில் மற்ற படங்களை விட 96 ரசிகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் குமார் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கிறார். தெலுங்கில் ராம், ஜானு கேரக்டரில் சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

96 படம் இயக்குநருக்கு விஜய் சேதுபதி கொடுத்த டிரீட்

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காதலே காதலே’ எனும் பாடல் பல்வேறு மொழியின மக்களிடமும் வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

96 movie, vijay sethupathi, விஜய் சேதுபதி

இந்நிலையில் 96 பட இயக்குநர் பிரேம்குமாருக்கு விஜய் சேதுபதி ரூ. 3 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு வண்டியை பரிசாக கொடுத்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close