/indian-express-tamil/media/media_files/szQ6MrvbF2cfF8CK7sBN.jpg)
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி
ரசிகர்களுடன் இணைந்து தனது மகாராஜா படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில், தன்னிடம் உதவி கேட்ட ரசிகை ஒருவருக்கு விஜய் சேதுபதி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானர் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என எதிலும் நிலையாக இருக்காமல், வித்தியாசமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வரும் இவர் நடிப்பில் இன்று மகாராஜா என்ற படம் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லரே ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மகாராஜா படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் 50-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான இந்த படத்திற்கு பெரிய ப்ரமோஷன் செய்யப்பட்ட நிலையில், துபாயில் கூட ப்ரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
If you have a chance to meet one #AkshayKumar or #VijaySethupathi
— Gulshan Katiyar (@GulshanKatiyar) June 14, 2024
Whom will you opt? pic.twitter.com/jX7iFa1IrK
தற்போது இந்த படத்தை ரசிகர்களுடன் இணைந்து திரையில் பார்த்து ரசித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். அவருக்கு பெரிய மாலை அணிவித்து க்ரீடத்தை அவருக்கு பரிசாக அளித்திருந்தனர். தொடர்ந்து பெண் ரசிகைகள் இணநை்து விஜய் சேதுபதிக்கு ஆரத்தி எடுத்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த விஜய் சேதுபதி ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
உதவி கேட்டவர்களிடம் விஜய் சேதுபதி செய்த செயல்..
— SS Music (@SSMusicTweet) June 14, 2024
.@VijaySethuOffl#Maharaja#MaharajaMovie#MaharajaMovieReview#MaharajaFDFS#VijaySethupathi#VJS50#Humanity#SSMusicpic.twitter.com/NbPPqmF9AT
விஜய் சேதுபதியுடன் இருந்த அவரின் பாதுகாவலர்கள் அவரை பத்திராக அழைத்துச்சென்று காருக்கு அருகில் விட்ட நிலையில், அங்கு விஜய் சேதுபதியிடம் ஒரு பெண் உதவி கேட்டுள்ளார். அப்போது அவரின் அருகில் இருந்த உதவியாளர் அந்த பெண்னை விரட்ட போக, அவரை தடுத்து நிறுத்திய விஜய் சேதுபதி, அவருக்கு பணம் கொடுத்துவிடு என்று சொல்வது போல் சைகை காட்ட, அவரும் தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து கொடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us