96 ஃபீலிங் விட்டு வெளிய வாங்க… விஜய் சேதுபதி அடுத்த படம் வரப்போகுது
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தில் 3வது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ரிலீஸ் தேதி அறிவிப்பது 3வது முறையாகும். விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணீதரன்.…
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தில் 3வது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ரிலீஸ் தேதி அறிவிப்பது 3வது முறையாகும்.
விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாலாஜி தரணீதரன். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஒரு பக்க கதை’. காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் சென்சாராகி ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.
சீதக்காதி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தற்போது, மீண்டும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணீதரன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘சீதக்காதி’. இது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் கேரியரில் 25-வது படமாம். இதில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான லுக்கில் வலம் வரவுள்ளார். ‘அய்யா’ என்ற இக்கதாபாத்திரத்துக்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு விஜய் சேதுபதி பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டாராம். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் 3-வது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.