Advertisment

நடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்... ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்... ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ

Jason Sanjay, ஜேசன் சஞ்சய்

ஜங்ஷன் என்ற குறும்படத்தை இயக்கி நடித்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜேசன் சஞ்சய் அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளராக களத்தில் குதித்துள்ளார்.

Advertisment

Jason Sanjay, ஜேசன் சஞ்சய்

கோலிவுட் உலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தளபதி விஜய். இவரின் மகன் சஞ்சய் தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இவரை பற்றிய தகவல் வெகு நாட்களாக வெளிவராமல் இருந்தாலும், அவ்வப்போது சஞ்சய் குறித்த பேச்சுகள் வந்துசெல்வது வழக்கம்.

விடியோ ஜாக்கியாக மாறியிருக்கும் ஜேசன் சஞ்சய்

வேட்டைக்காரன் படத்தில் கூட ஒரு பாடலில் விஜயுடன் அவர் நடனமாடினார். அதன் பிறகு புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடிந்த சஞ்சயை ஜங்சன் என்ற குறும்படத்தின் மூலம் பார்க்க முடிந்தது. ஜங்சன் எனும் ஒரு குறும்படத்தை அவரே இயக்கி அதில் நடித்துள்ளார். கல்லூரியில் நடைபெறும் ராக்கிங் பற்றி அந்த கதை பேசுகிறது.

விஜய் மகனின் குறும்படத்தை பார்க்க இதை கிளிக் செய்யவும்

இதையடுத்து, வீடியோ ஜாக்கியாகவும் இப்போது களத்தில் இறங்கியிருக்கிறார். இருமுகன், அரிமா நம்பி, நோட்டா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த சங்கருடன் அவர் ஒரு நேர்காணல் நடத்தியுள்ளார்.

குறும்படம் மற்றும் விஜே என மீடியாவில் முழு வீச்சில் இறங்கியிருக்கும் ஜேசன் சஞ்சயை விரைவில் கோலிவுட்டிலும் பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment