தளபதி விஜய் மகன் சஞ்சய் விஜய் இயக்கி, நடித்துள்ள ஜங்ஷன் படம் டீசரை சொந்தமாக இயக்கி வரும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
Advertisment
சஞ்சய் விஜய் நடித்துள்ள ஜங்ஷன் குறும்படம் :
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று சும்மாவா சொன்னார்கள். கோலிவுட்டில் தளபதி விஜய் ஒரு புறம் பயங்கர மாஸ் காண்பித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அவரது மகனும் தந்தையை போலவே நடிப்பில் களமிறங்கியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன், சஞ்சய் விஜய் தற்போது அமெரிக்காவில் கல்வி பயின்று வருகிறார். இவர் கல்வி பயிலும்போதே தனியாக ஒரு யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார். அந்த சேனலில் சஞ்சயே இயக்கி நடித்துள்ள ஜங்ஷன் படத்தின் டீசர் வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இந்த டீசரில் முதலில் இரண்டு சிறுவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுகின்றனர். அப்படியே அந்த கேமரா திரும்பி ஒரு சிறுவனை ஃபோகஸ் செய்கிறது. அதை பார்த்தவுடன் பக்கென்று மனம் தூக்கிப் போடுகிறது.
“என்னடா இது விஜய் உகார்ந்துட்டு இருக்காரு” என்று நினைக்கும் அடுத்த நொடியில், சோகமாக ஒரு முகம் நிமிர்ந்து பார்க்கிறது. அப்போது தான் தெரிகிறது, அது சஞ்சய் விஜய். இத்துடன் டீசர் நிறைவடைகிறது. இதை பார்த்த ரசிகர்கள் விஜய் படத்தையே பார்த்தது போல விசில் அடித்தும் கைத்தட்டியும் குஷியில் கொண்டாடினர்.