நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இயக்குனர் நெல்சன். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதையும் வென்றார்.
தொடர்ந்து தனது நெருங்கிய நண்பன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் இந்த படம் வெளியாகி’ பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. தொடர் ஊரடங்கால், வீடுகளுக்குள்ளே முடங்கியிருந்து மன அழுத்தம் ஏற்பட்ட ரசிகர்களுக்கு டாக்டர் படம் ஒரு சிறந்த ட்ரீட் ஆக இருந்தது.
இப்படி அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் கொடுக்க, நெல்சன்’ 3வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியது.
இப்போது நெல்சன், தளபதி விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து, அதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே’ பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.
அந்த ஹைப் இன்னமும் குறையவில்லை. அதற்குள் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, இணையத்தில் புயலைக் கிளப்பியது. படத்தில் இயக்குனர் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் மற்றும் நெல்சனின் டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களிலும் நடித்த ஏராளமான நடிகர்கள் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
பொதுவாக விஜய் படங்களில் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்ற செய்தி, ரசிகர்களை சிறிது சோகத்தில் ஆழ்த்தியது.
அதை ஈடுகட்டும் வகையில், இப்போது விஜய், பீஸ்ட் பட புரோமோஷனுக்காக, சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இயக்குனர் நெல்சன் தொகுப்பாளராக இருந்து கேள்விகள் கேட்க, விஜய் பதிலளிக்கும் புரோமோ இப்போது விஜய் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, விஜய் பேட்டியளித்துள்ளார்.
நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இப்போது’ அதே பேனரில் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்தில் வெளியானது. தற்போதைக்கு இந்த படத்துக்கு #தலைவர்169 என பெயரிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“