சர்கார் அமைச்சிட்டு தேர்தலில் நிற்கிறோம் : மெர்சல் காட்டிய நடிகர் விஜய்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor vijay speech, நடிகர் விஜய்

actor vijay speech, நடிகர் விஜய்

சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் பேசியது அரங்கத்தையே அதிர வைத்தது.

Advertisment

நடிகர் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் கத்தி படத்திற்கு அடுத்து உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சு :

Advertisment
Advertisements

இசை வெளியீட்டு விழாவில் பேசிய சன் குழுமத்தின் தலைவர், ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் தான் எளிமையின் உச்சம் என்று கூறியிருந்தார். இயக்குநர் முருகதாஸ் உட்பட படக்குழுவினர் அனைவரும் விஜய்யை புகழ்ந்து பேசினர். முருகதாஸ் பேசுகையில் சர்கார் படத்தில் உண்மையான விஜய்யை பார்ப்பீர்கள் என்றும் கூறினார்.

இவ்விழாவில் இறுதியாக பேசிய விழாவின் நாயகன் நடிகர் விஜய்,

“சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்” என்று அதிரடியாகப் பேசினார்.

கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக நிதியை அள்ளி வழங்கி வருகிறார் கலாநிதிமாறன். ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு ஆஸ்கர் கிடைத்தது மாதிரி. ஒருவிரல் புரட்சி பாடல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எழுச்சி. யோகி பாபுவின் அசுர வளர்ச்சியை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

பழ.கருப்பையாவுடன் சேர்ந்து நடித்ததை கௌரவமாக நினைக்கிறேன். வரலட்சுமி நடிப்பது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது தான் தெரியும். வர்ர லட்சுமிய ஏன் வரக்கூடாது என்று சொல்ல வேண்டும். வரலட்சுமி கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகள். வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானால் உழைக்கலாம். வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் உழைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, இயற்கை.

எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறாம். ரசிகர்களின் ஆரவாரம் அரங்கில் ஓய்ந்தவுடன் படத்தை வெளியிடுவது பற்றி கூறினேன் என்று கூறினார்.

முதலமைச்சரானால் நீங்கள் மாற்ற வேண்டிய முதல் விஷயம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார். லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழிக்க பாடுபடுவேன்; கற்பனையாக முதலமைச்சர் ஆனால் இப்படி எடுத்துக்கலாம் என்று கூறி மீண்டும் அதை தெளிவுபடுத்தினார்.

இதைத்தொடர்ந்து குட்டிக் கதை கூறிய அவர், மேல்மட்டத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தர்மம் தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். ஒரு நெருக்கடி ஏற்படும் போது நல்லவர்கள் பொது வெளிக்கு வருவார்கள்” என்று கூறினார்.

இவரின் பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டல், விசில் என அதிர்ந்தது. இணையதளம் முழுவதும் சர்கார் குறித்த பதிவீடுகளால் சமூக வலைதளம் ஸ்தம்பித்தது.

Tamil Cinema Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: