Advertisment

இன்று கோடியில் சம்பளம்; விஜய்யின் முதல் படம் எது? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜய்யின் சம்பளமும் டாப் கியரில் தான் உள்ளது.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக உள்ளார் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிப்பு, நடனம், பாடகர் எனப் பல்முகத் தன்மையால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார். இவரது படம் ரிலீஸுக்கு முன்பே வசூல் சாதனை படைக்கும். பாடல், ஆடியோ லாஞ்ச் விழா என விஜய்யின் படம் 

ரிலீஸுக்கு முன்பே திருவிழா போல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும். 

Advertisment

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'GOAT' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.  

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் நீண்ட காலம் எதிர்பார்த்தபடி விஜய் அண்மையில் தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார். 

தொடர்ந்து தளபதி 69 படத்திற்கு பின் முழு நேர மக்கள் பணியில் ஈடுபடப்போவதால் சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும், கோடியில் சம்பளம் பெறும் நடிகராக, டாப் நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார். 

விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் மட்டுமல்லாது அவரது சம்பளமும் உச்சத்தில் உள்ளது. அவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  1984-ல் விஜய் முதல் முதலில் சினிமாவில் அறிமுகமானார். வெற்றி என்ற படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்போது அவரது சம்பளம் ரூ.500 என இயக்குநரும். விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு நேர்காணலில் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment