Advertisment

விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன்... தளபதி 68 பட பூஜை வீடியோ வைரல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் பட பூஜை தொடர்பான வீடியோ பதிவை தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Vijay Prashanth.

தளபதி விஜய் - டாப் ஸ்டார் பிரஷாந்த்

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இதனிடையே லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், பிரபுதேவா, பிரஷாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் தளபதி 68 படம் மூலம் யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசைமைக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதல்கட்டமாக ஒரு பாடல்காட்சி படப்பிடிப்பு நடந்ததாகவும், இந்த பாடலில் பிரபு தேவா, பிரஷாந்த் மற்றும் விஜய் ஆகியோர் நடனமாடியதாவும் நட்பு பாராட்டுவது போன்று இந்த பாடல் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே தற்போது படத்தின் பூஜை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தயாரிப்பு நிறுவனமாக ஏ.ஜி.எஸ் வெளியிட்டுள்ளது.

பின்னணி இசையுடன் தொடங்கும் இந்த வீடியோ பதிவில் படத்தில் நடிக்க உள்ள முக்கிய நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் விஜயுடன், பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், அஜ்மல், மற்றும் வெங்கட் பிரபுவின் நடிகர்கள் வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

மேலும் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்தபோது அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த லைலாவுடன் போட்டோஷூட் நடந்தது. ஆனால் விஜய் அப்படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு விஜய் – லைலா இணைந்து எந்த படத்திலும் நடிக்காத நிலையில், முதல் முறையாக தளபதி 68 படத்தில் விஜயுடன் லைலா இணைந்துள்ளார்.

அதேபோல் விஜய் நாயகனாக நடிக்கும் முன்பே சினிமாவில் ஹீரோவாகிவிட்ட பிரஷாந்த் இந்த படத்தில் நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் பட பூஜையில், விஜய் பிரஷாந்தை கட்டி பிடித்து வரவேற்றது தொடர்பான காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment