2018ம் ஆண்டின் டாப் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ள பிரபலங்களில் ஒரே தமிழனாக இடம்பெற்றுள்ளார் தளபதி விஜய்.
பல மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளின் நினைவுகளையும், சில கசப்பான சம்பவங்களையும் சுமந்து கடைசி மாதத்தை வந்தடைந்துள்ளது இந்த 2018ம் ஆண்டு. இறுதி மாதம் நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பும் டிரெண்ட் ஆவது வழக்கம்.
ட்விட்டர் டாப் 10 டிரெண்டிங்கில் நடிகர் விஜய்
குறிப்பாக ட்விட்டர் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டில் அதிகமாக பேசப்பட்ட முதல் 10 பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். அதே போல 2018ம் ஆண்டின் டாப் 10 பிரபலக்களின் பெயரை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களின் பெயரும் இருக்கிறது. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய இன்பதிர்ச்சி இருக்கிறது. அதிலும், தளபதி ரசிகர்களை இனிமேல் கையில் பிடிக்க முடியாது. வானத்துக்கும் பூமிக்கும் மகிழ்ச்சியில் குதிக்கின்றனர்.
December 2018
காரணம், அந்த டாப் லிஸ்ட் பட்டியலில் இருக்கும் ஒரே தமிழன் தளபதி மட்டுமே. பிரபலங்களில் பட்டியலில் 8வது இடத்தில் விஜய் பெயர் வந்திருக்கிறது என்றால் டாப் 10 பிரபல தலைப்புகளில் முதல் இடம் பிடித்திருக்கிறது சர்கார்.
December 2018
பிரபலங்களின் பட்டியல் :
1. மோடி
2. ராகுல் காந்தி
3. அமித் ஷா
4. யோகி ஆதித்யநாத்
5. அர்விந்த் கேஜ்ரிவால்
6. பவன் கல்யாண்
7. ஷாருக் கான்
8. விஜய்
9. மகேஷ் பாபு
10. ஷிவ்ராஜ் சிங் சவுகான்
இந்த வருடத்தின் முடிவு விஜய் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் தான். அடுத்த ஆண்டு விஜய் 63 இதே போல் கொண்டாட்டத்தை அளிக்குமா? பார்ப்போம்.