scorecardresearch

விஜய் ரசிகர்களுக்கு டிச., 24-ம் தேதியே ‘பொங்கல்’: நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு டிச., 24-ம் தேதியே ‘பொங்கல்’: நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், குஷ்பு, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வழக்கம்போல் விஜய் தாறுமாறாக நடனமாடியுள்ள இந்த பாடல் தற்போது பலரின் ரிங்டேனாக மாறியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் அடுத்த பாடல் மற்றும் அப்டேட் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில். வரும் டிசம்பர் 24-ந் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த தகவலை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு படம் பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor vijay varisu movie audio release update nehru indoor stadium on december