Tamil Movie Vijay Varisu Review Live Update : தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 4-ந் தேதி வெளியாக வாரிசு படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்து.
இந்நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு படம் நாளை (ஜனவரி 11) பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக படக்குழுவுக்கு முன்பே ரசிகர்கள் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விஜய் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எங்கும் பாசிட்டிவ் விமர்சனம்
Positive reviews everywhere for #varisu 🔥Pongal Treat for fans and families!Double Blockbuster Hit 💥🔥 #varisupongalwinner#varisureview #thalapathy #vamshipaidipally#thunivureview #varisupongal pic.twitter.com/wkxJtarpNa
— VIJAY FANS WORLD (@VijayFansWorld_) January 11, 2023
ஆட்டம்னு வந்துட்டா ஐயா கில்லி கில்லி மாதிரி
ஆட்டம்னு வந்துட்டா ஐயா @actorvijay கில்லி கில்லி மாதிரி 🔥ிழகத்தின்_தவிற்கமுடியாத_வாரிசு_விஜய் #varisupongalwinner pic.twitter.com/Nxcat6bxlk
— @ஹபீபி /حبيبي/ Habibi (@vaathiRaiD) January 11, 2023
வாரிசு ட்வீட்டர் விமர்சனம்
அந்த சத்தம் @actorvijay #blockbustervarisu #varisupongalwinner pic.twitter.com/1qlEEax6CY
— JD (@JDmaster786) January 11, 2023
வாரிசு படம் பிடிக்காத சில ரசிகர்கள் வாரிசு டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்
ஒரு Cringe படத்தை எடுத்து வச்சிகிட்டு, இதுல No.1 என்று சொல்ல வெட்கமா இல்ல 🤦🏻♂️🤦🏻♂️இனிமே உங்க படத்தோடு Clash விட எல்லா நடிகர்களும் தயாரா இருப்பாங்க, ஈஸியா உங்கள அடிக்கலாம் பாரு 😅😅#varisudisaster pic.twitter.com/nKbSnMdYx8
— R 🅰️ J (@baba_rajkumar) January 10, 2023
வாரிசு ரசிகர்கள் விமர்சனம்
எதுக்குடா இந்த படத்தை எடுத்திங்க , ரசிகர்கள் செம்ம காண்டுல இருகாங்க போல #varisudisaster pic.twitter.com/1Gliba8Qsn
— 🔥தீ🔥 (@RajiniGuruRG) January 11, 2023
தளபதியின் ஆல் செண்டர் அதகளம், அவர் திரையில் என்ன செய்தாலும் அது ஒரு வசீகரமாகவே இருக்கிறது, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி, பிளாக்பஸ்டர்
#varisu Thalapathy”s All center Adhagalam 😍😍🔥🔥🔥💥. Whatever he does on screen works like a charm❤️💫.Getting Applause for a director card proves @directorvamshi sir's mettle. Congrats sir👌🙏.You declared, & delivered a genuine Kudumbangal kondaadum Vetri👏👍. BLOCKBUSTER💥 pic.twitter.com/Lv43JDJIoj
— Rathna kumar (@MrRathna) January 11, 2023
பல ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக நடிக்க வேண்டும் என்ற தளபதி விஜய்யின் எண்ணம் அதிசயங்களைச் செய்திருக்கிறது. இயக்குனர் வம்சி மறக்கமுடியாத படத்தை உருவாக்கியுள்ளார்!
Idea of #thalapathyvijay to do a full fledged family entertainer amidst many action films has worked wonders 👏 #varisu is getting a fantastic response from all round and is on its way to become a big blockbuster. @directorvamshi has made the MEMORABLE film he was talking about!
— Siddarth Srinivas (@sidhuwrites) January 11, 2023
வாரிசு- ரொண்ட் 2. குறிப்பாக நீல நிற புல்லாங்குழல் நடனம், சிங்கிள் ஷாட் ரஞ்சிதமே , அவரது மேனரிஸம், அவரது ஸ்கீரின் பிரசன்ஸ் ஆகியவற்றால் படத்திற்கு அதிக மதிப்பு உள்ளது. காமிக் ஒன் லைனர்கள், தளபதி மூவி ரெஃபரென்ஸ். தீ தளபதி . இது ஒன் மேன் ஷோ. ஆம் அவர் ஆட்டநாயகன்
Round 2 #varisu. Lot of repeat value for the film especially out of the blue Flute Dance💥,Single shot Ranjithame 🥳, His Mannerisms😍, His Screen presence 😱. Comic One liners😂, Thalapathy movie references🎉. Thee Thalapathy 🔥. Its an One Man show. Yes he is ஆட்டநாயகன் 👌💫. pic.twitter.com/ykCnRtTQE1
— Rathna kumar (@MrRathna) January 11, 2023
இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்
Celebration begins!! #varisu #thunivu #blockbusters #longlivecinema pic.twitter.com/8uggks5uyl
— venkat prabhu (@vp_offl) January 11, 2023
வா தலைவா தலைவா, விண்டேஜ் தளபதி விஜய் மீண்டும் வந்துள்ளார். இயக்குனர் வம்சி எங்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கைக் கொடுத்தீர்கள்.
Vaa thalaivaa thalaivaa ♥️💯🔥 . Vintage #thalapathyvijay is back with dance movies and his humour 🤩 . @directorvamshi you gave us a perfect entertainer . All mass . #varisupongal . @MusicThaman and @Lyricist_Vivek what a combo . Dialogues and BGM 🔥.#varisufdfs #boss_returns pic.twitter.com/asow45n5SU
— Ajith_Vijayasekar😎 (@Ajithsachin3115) January 11, 2023
வாரிசு ஒரு முழுமையான குடும்ப உணர்வுடன் முடிகிறது, நடிகராக விஜய்யின் வாழ்க்கையில் ஒரு சிறந்த படம், தமன் BGM மற்றும் இசை திரைப்படத்தின் முதுகெலும்பு, இயக்குனர் வம்சி இயக்குனராக வென்றார்
#varisu Ends with One Complete Family Sentiment❤️One Best film on Vijay's Career as an Actor👌@MusicThaman Backbone of Film with his appreciable BGM and Music❤️@directorvamshi YuWon as an director❤️Rating – 4/5 ⭐⭐⭐⭐#varisu #varisufdfs #varisupongal2023 #varisureview pic.twitter.com/gWeJK8yEOh
— Vidya Suganya (@Vidya_Suganya) January 11, 2023
வாரிசு படம் பார்த்துவிட்ட கண்ணீர் விட்ட இசையமைப்பாளர் தமன்
It’s always special seeing your film getting celebrated by the fans at “Mecca of celebrations” #fansfortrohini Team #varisu @MusicThaman @directorvamshi @DilRajuOff_ witnessing the mass of #thalapathy at #varisufdfs 🔥🔥 #varisu #pongalthiruvizhaatrohini pic.twitter.com/LDMox8iavN
— Rohini SilverScreens (@RohiniSilverScr) January 11, 2023
பேமிலி ஆடியன்ஸ் தலைல கட்டிட்டு பொறந்தவன்டா
நீ பொறக்கும்போதே பேமிலி ஆடியன்ஸ் தலைல கட்டிட்டு பொறந்தவன்டா ாரிசு pic.twitter.com/mtqOzIkTmg
— வாரிசு சேட்டு (@SettuOfficial) January 11, 2023
படத்தில் உள்ள ட்விஸ்ட் நன்றாக உள்ளது. காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என எல்லாம் உள்ளது. க்ளைமேக்ஸ் சீன் நன்றாக உள்ளது. சென்ட்டிமென்ட் ஆக உள்ளது என்று ரசிகர்கள் கூறினர். wholesome entertainment ஆக உள்ளது என்றும் கூறினர்.
ரோகிணி திரையரங்கில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, இசையமைப்பாளர் தமன், ஷியாம் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் வாரிசு படம் பார்த்தனர். ரசிகர்கள் உற்சாகத்தில் இசையமைப்பாளர் தமன் உணர்ச்சி வசப்பட்டார்.
சென்னை மதுரவாயிலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகை த்ரிஷா வாரிசு திரைப்படம் பார்த்தார்.
வாரிசு படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் முழுக்க கலர்ஃபுல்லாக, அழகாக உள்ளது. படத்தில் அரசியல் இல்லை, பக்கா குடும்ப படமாக உள்ளது. விஜய்யின் காமெடி நன்றாக உள்ளது என ரசிகர்கள் கருத்து
படம் கலர்ஃபுல்லாக இருக்கிறார்.
தளபதி Haters-கூட அவரின் Dance-யை பார்த்து ரசிப்பாங்க என வாரிசு குறித்து ரசிகர்கள் கருத்து
அதிகாலை 4 மணிக்கு வெளியான வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டம். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, பாடல் என அனைத்தும் நன்றாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
கூட்டு குடும்பம் பற்றிய படமாக உள்ளது. அப்பாதான் எங்களுக்கு ஹீரோ என்றார்.
விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை வெளியாவதை முன்னிட்டு வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அயனாவரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் விருத்தாச்சலம் பகுதியில் பலருக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் ரத்ததானம் கொடுப்பவர்களுக்கு வாரிசு படத்தின் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்த நடிகை குஷ்பு ஒரு பேட்டியில், “வாரிசு படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது, விஜய் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். அருகில் உள்ள கேரேஜில் ஓய்வெடுத்து படப்பிடிப்பை முடித்தார். முழு காட்சியையும் முடித்த பிறகுதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை விஜய்யின் வாரிசு படத்தின் அதிகாலை 4 மணி மற்றும் அதிகாலை 5 மணி காட்சிகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. திரையரங்குகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள படத்தின் பேனர்களில் நடிகர்களின் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யயும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் 643 திரைகள் உள்ள நிலையில், இதில் 400+ திரைகளில் வாரிசு வெளியாகும் என்று வர்த்தக ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் டிக்கெட் விற்பனையைக் கண்காணிக்கும் கர்நாடகா டாக்கீஸின் ட்விட்ர் பதிவில், வாரிசு படம் 81,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுள்ளதாகக் கூறுகிறது. கர்நாடகாவில் வாரிசு 81,500+ டிக்கெட்டுகளை ₹2 கோடி மதிப்பிலான விற்பனை செய்துள்ளது” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
வாரிசு படத்தின் ரன்னிங் டைம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் 1 மணி நேரம் 29 நிமிடமும், செகண்ட் ஆஃப் 1 மணி நேரம் 20 நிமிடம் என படம் மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
#varisu Run Time Schedule Up to Interval : 1 hr 29 minutes Post Interval : 1 Hour 20 MinutesTotal Run Time : 2 Hours 50 Minutes#varisupongal Release: Jan 11th pic.twitter.com/h0zSqnLIy1
— Sreedhar Pillai (@sri50) January 9, 2023