அறிமுக நடிகரின் ஆக்ஷன் படம் : மாஸ் என்ட்ரி கொடுத்து வாழ்த்திய விஜய் : வைரல் போட்டோஸ்!

இயக்குனர் விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இயக்குனர் விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

author-image
WebDesk
New Update
Vijay kanishka

நடிகர் விஜய் கனிஷ்காவுடன் தளபதி விஜய்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரது உதவியாளர்கள் இயக்கியுள்ள ஹிட்லிஸ்ட் திரைப்படம் வரும் மே 31-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் குழுவினரை சந்தித்த நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் புது வசந்தம் படம் தொடங்கி, சூரியவம்சம், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பூவே உனக்காக உள்ளிட்ட மெகாஹிட் படங்களை இயக்கியவர் விக்ரமன். கடைசியாக சென்னை காதல் என்ற படத்தை இயக்கிய இவர், கடந்த சில வருடங்களாக திரைத்துறையில் இருந்து விலகி இருக்கிறார். அதே சமயம் அவரது மகன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சூர்யகதிர் காக்கலர், மற்றும் கே. கார்த்திகேயன் என இரட்டை இயக்குனர்கள் இயக்கியுள்ள இந்த படத்தை, விக்மனிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். சரத்குமார், கௌதம்மேனன் ஆகியோர் முக்கிய கேரகடரில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ரமன் மகன், விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் மே 31-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தி்ல டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

Advertisment
Advertisements

இதனிடையே தற்போது ஹிட்லிஸ்ட் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், நாயகன் விஜய் கனிஷ்கா ஆகியோரை தளபதி விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது விஜய்யை கட்டிபபிடித்து வரவேற்ற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் இயக்குனர் விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் விஜய் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோல்வியால் துவண்டு கிடந்த விஜயின் சினிமா வாழ்க்கையை தனது பூவே உனக்காக படத்தின் மூலம் தூக்கி நிறுத்தி விஜய்க்கு வாழ்க்கை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஜயின் மின்சார கண்ணா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ks Ravikumar vikraman Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: