அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சவுமியா 'அலங்கு' என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்து தயாரிப்பாளர் ஆகியுள்ளார். அலங்கு படத்தை `உறுமீன்', `பயணிகள் கவனிக்கவும்' படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கி உள்ளார். இதில், மலையாள நடிகர் செம்பன் மற்றும் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் வரும் 27-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அலங்கு படத்தின் படக்குழுவினர், நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு அலங்கு படத்தின் ட்ரெய்லரை காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“