By: WebDesk
October 12, 2020, 10:29:13 PM
தமிழ்த் திரைப்பட நடிகர் தளபதி விஜய் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வொர்க் அவுட் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவாதத்திலும் அவரது ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
62 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகனாக விஜய் நடித்துள்ளார். அவரது, இந்த அசாத்திய வெற்றிக்கு வொர்க் அவுட் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார்.
விஜயின் சமீபத்திய மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொது முடக்கநிலை காரணமாக திரை அரங்குகளில் இன்னும் வெளியிடப்படவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Actor vijay workout videos actor vijay viral videos