போலீஸுக்கு வந்த பெரிய நாட்டாமை குடும்ப பஞ்சாயத்து: வனிதா விஜயகுமார்-விஜயகுமார் இடையே ‘உரிமைப் போர்’

Vijayakumar Filed Complaint Against Daughter Vanitha: விஜயகுமார், வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ஒப்படைக்கும் ஆவணங்கள் அடிப்படையில் இதில் முடிவு எடுக்க இருப்பதாக மதுரவாயல்...

Actor Vijayakumar Filed Complaint Against Daughter Vanitha: நடிகை வனிதா விஜயகுமார் மீது அவரது தந்தை விஜயகுமார் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா படப்பிடிப்புக்காக மகளிடம் ஒப்படைத்த பங்களா வீட்டை வனிதா விஜயகுமார் தன்னிடம் ஒப்படைக்க மறுப்பதாக விஜயகுமார் புகார் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜயகுமார் குடும்பம், தமிழ் சினிமாவில் பிரசித்தி பெற்றது! விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா, எம்.ஜி.ஆர்.-சிவாஜி காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஆவார்.  விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். விஜயகுமாரின் மகள்களும் சினிமா நட்சத்திரங்கள்தான்!

விஜயகுமார் கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடங்களில் ஜொலித்தவர்! நாட்டாமை படத்தில் பெரிய நாட்டாமையாக விஜயகுமார் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. அந்தப் படத்தில் சிவாஜி நடிப்புக்கு இணையாக இவரது நடிப்பை பலரும் குறிப்பிட்டனர். சினிமாவில் பெரிய நாட்டாமையாக வந்த விஜயகுமா தனது மகள் மீதே பிராது கொடுக்கும் சூழல் வந்திருப்பது துரதிருஷ்டம்தான்!

வனிதா விஜயகுமார் மீது புகார் கொடுத்த நடிகர் விஜயகுமார்:

சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் அவரது 5 மகள்களில் ஒருவரான நடிகை வனிதா சில வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார்.

இருவருக்கும் இடையே பல வருடங்களாகவே பிரச்சனை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது வாடகைக்கு இருக்கும் வீட்டை காலி செய்து தருமாறு, விஜயகுமார் வனிதாவிடம் கேட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா

ஆனால் அவர் கேட்க மறுத்த நிலையில்,  சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விட்ட தனது வீட்டை மகள் ஒப்படைக்க மறுப்பதாக விஜயகுமார் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் வனிதா அந்த வீடு தம்முடைய வீடு என்றும், தமக்கும் அதில் பங்குள்ளது எனவே காலி செய்ய முடியாது என்றும் பதிலளித்துள்ளார்.

விஜயகுமார் கொடுத்த புகாரை மதுரவாயல் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அந்த வீடு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும்படி இரு தரப்பையும் போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். விஜயகுமார், வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ஒப்படைக்கும் ஆவணங்கள் அடிப்படையில் இதில் முடிவு எடுக்க இருப்பதாக மதுரவாயல் போலீஸார் கூறினர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close