Advertisment

வந்துட்டாரு பெரிய நாட்டாமை: ஜீ தமிழ் சீரியலில் விஜயகுமார் ரீ என்ட்ரி

ஜீ தமிழ் சேனலில் மீண்டும் களமிறங்கும் விஜயகுமார்; எந்த சீரியல் தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijayakumar

கார்த்திகை தீபம் சீரியலில் நடிகர் விஜயகுமார்

ஜீ தமிழ் சேனல் சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் விஜயகுமார்.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல கதாப்பாத்திரங்களில் கலக்கியவர் நடிகர் விஜயகுமார். குறிப்பாக நாட்டாமை கெட்டப்களுக்கு பெயர் பெற்றவர் விஜயகுமார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜய் டிவியில் இன்னொரு ரியல் காதல் ஜோடி? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா போட்டோ

இதுதவிர சீரியல்களிலும் விஜயகுமார் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிப்பரப்பான தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பான ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி சீரியலில் நாட்டாமையாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது மீண்டும் ஜீ தமிழ் சேனலில் என்ட்ரியாகிறார் விஜயகுமார். ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ராஜா சேதுபதி என்ற ஜமீனாக நடித்து வருகிறார் விஜயகுமார். கார்த்திகை தீபம் தொடரில் விஜயகுமாரின் என்ட்ரி பில்டப்புடன் ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், இந்த எபிசோடுகள் மீது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், அர்த்திகா, ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment