Advertisment

விஜய் டிவியில் இன்னொரு ரியல் காதல் ஜோடி? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா போட்டோ

விஜய் டிவியில் இன்னொரு நிஜ காதல் ஜோடி இணைய உள்ளதாக ஒரு தகவல் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pandian Stores, Pandian Stores kannan aishwarya loves, Saravana Vickram Deepika ss loves, விஜய் டிவியில் இன்னொரு நிஜ காதல் ஜோடி, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா, தீபிகா, சரவண விக்ரம், - Pandian Stores Serial, Saravana Vickram, Deepika, ss loves

விஜய் டிவியில் இன்னொரு நிஜ காதல் ஜோடி

Pandian Stores Serial Vickram Deepika: விஜய் டிவியில் இன்னொரு நிஜ காதல் ஜோடி இணைய உள்ளதாக ஒரு தகவல் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Advertisment

பெரிய திரையைப் போலவே, சின்னத் திரையிலும் நடிகர்கள் சிலர், ஒன்றாக நடிக்கும்போது, நிஜமாகவே காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஒன்றிணைகிறார்கள். அப்படி சின்னத் திரையில், ஆர்யன்-ஷபானா, ரேஷ்மா-மதன், ஆல்யாமானசா-சஞ்சீவ் கார்த்திக் என்று ஜோடிகளின் வரிசையை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய இருக்கிறார்கள்.

விஜய் டிவி சீரியல்களில் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் முன்னணியில் இருந்து வரும் சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றால், கூட்டுக் குடும்பமாக வாழும் அண்ணன் தம்பிகளின் பாசக் கதை. இந்த படம் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக வாழ்வதில் உள்ள அனுகூலங்களையும் சிக்கல்களையும் கூறுவதாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பான நகர்வுடன் பார்வையாளர்களை ஈர்த்து தக்கவைத்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் கிடைத்த வரவேற்பை வைத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

publive-image

உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்கள் சரவணன் விக்ரம்-தீபிகா.

இந்த சீரியல் மூலம் இருவரும் மக்களுக்கு பிடித்தமானவர்களாக மாறியிருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தது விஜே தீபிகா. அவருடைய முகத்தில் பருக்கள் அதிக அளவில் இருந்ததால், அவர் சீரியலை விட்டு விலகினார். அவை சரியான நிலையில், தீபிகா தற்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தீபிகா இந்த சீரியலில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தபோது கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து பல ரில்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டார்கள். தற்போது இவர்கள் இணைந்து ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால், பலர் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். ஆனால், இது குறித்து இருவருமே எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

publive-image

இந்த நிலையில் தற்போது இருவரும் இணைய இருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியாகிறது. அதாவது சரவணன் விக்ரம் உடைய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இனி மட்டுமில்லாமல் இனிவரும் வாழ்க்கையில் நாங்கள் சேர்ந்து இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் சீரியலில் சேர்ந்து நடித்தவர்கள் காதலித்து நிஜ வாழ்க்கையில் ஜோடியாக இணைந்த காதல் ஜோடிகளின் வரிசையில் இவர்களும் இணைகிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pandian Stores
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment