Advertisment

பூங்காவில் குழந்தை போல விளையாடிய நடிகர் விஜயகுமார்; மகளுடன் க்யூட் வீடியோ

தன்னுடைய பேத்தி தியாவின் ரிசப்ஷனுக்காக அமெரிக்காவிற்கு சென்ற நடிகர் விஜயகுமார், அங்கே தன்னுடைய இரண்டாவது மகள் அனிதாவோடு பூங்காவில் குழந்தை போல விளையாடிய புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vijaykumar playing

நடிகர் விஜயகுமார் தன்னுடைய இரண்டாவது மகள் அனிதாவோடு பூங்காவில் குழந்தை போல விளையாடிய புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தன்னுடைய பேத்தி தியாவின் ரிசப்ஷனுக்காக அமெரிக்காவிற்கு சென்ற நடிகர் விஜயகுமார், அங்கே தன்னுடைய இரண்டாவது மகள் அனிதாவோடு பூங்காவில் குழந்தை போல விளையாடிய புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisment

இந்த புகைப்படங்களை அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர இது அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. 

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் விஜயகுமார்,  ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என ரசிகர்களைக் கவர்ந்தவர். நடிகர் விஜயகுமார் குடும்பத்தில், அருண் விஜய், வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என அனைவரும் நடிகர்கள்தான்ன். ஆனால் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் மருத்துவம் படித்துவிட்டு டாக்டராக இருக்கிறார். 

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவி பெயர் முத்து கண்ணு. விஜயகுமார் - முத்துகண்ணுவுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள். 

முத்து கண்ணுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விஜயகுமார் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்தார். 

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் இருக்கிறார்கள். விஜயகுமாரின் இரண்டு மனைவியின் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், வனிதா மட்டும் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார், வேலையில் இருந்து விலகி இருக்கிறார். அதே நேரத்தில் அனிதா தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அனிதா விஜயகுமாரின் புகைப்படங்கள் அதிகமான லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்று வருகிறது. 

விஜயகுமாரின் மகள் அனிதா சில மாதங்களுக்கு முன்பு, தனது மகள் தியாவின் திருமணத்தை சென்னையில் கோலாகலமாக நடத்தினார். ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அனிதாவின் மகள் தியாவும் ஒரு டாக்டர்தான், அவர் தன்னுடன் படித்த திலனைக் காதலித்து கரம்பிடித்தார்.

இந்த நிலையில், தியாவின் ரிசப்ஷன் அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னுடைய மகளான அனிதாவோடு விஜயகுமார் பூங்கா ஒன்றில் விளையாடி இருக்கிறார். அனிதா தனது தந்தை விஜயகுமார் பூங்காவில் குழந்தைபோல விளையாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment