நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து செய்தியாளரிடம் அவர் பேசுகையில், “அனைவரும் வியாதி இல்லாமல் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக வந்தேன். வேற ஒன்றும் இல்லை. எல்லாருக்கும் கோவிலுக்கு வருவதுபோல்தான் நானும் வந்தேன்.
ரொம்ப நேரம் அம்பாளின் அபிஷேகம் எல்லாம் பார்த்தேன். எல்லாருக்கும் நல்லா இருக்கணும்.
எல்லாரும் வேண்டிக்கோங்க. விஜய் படம் நல்லா ஓடணும். நன்றி” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் விஜய் அடுத்த படத்தில் எந்த மாதிரி நடிக்கிறார் எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, “எனக்கு இந்தப் படத்தில் அவர் என்னவா நடிக்கிறார் என்பது கூட தெரியாது. குடும்ப பாங்கான திரைப்படம் என்று மட்டும்தான் தெரியும்” என்றார்.
நடிகர் விஜயின் அரசியல் ஈடுபாடு குறித்து கேட்டதற்கு, “அதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ? கடவுள் என்ன நினைக்கிறாரோ? என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/