புதிய சாதனை படைத்த மாஸ்டர் செல்ஃபி! ட்விட்டரை அதகளப்படுத்திய புகைப்படம்

இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி.

இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி.

author-image
WebDesk
New Update
Actor Vijay's selfie becomes most retweeted photo in Twitter India

Actor Vijay's selfie becomes most retweeted photo in Twitter India : கடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். விசாரணைக்காக நடிகர் விஜய் படபிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

Advertisment

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஒத்துழைத்த விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். வருமான வரித்துறை சோதனையை அறிந்த பிறகு, நெய்வேலியில் படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள்.

தொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர் கூட்டம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் படபிடிப்பினை முடித்த விஜய் அங்கிருக்கும் பேருந்து ஒன்றில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த செல்ஃபி பலராலும் அதிகம் ரிட்வீட் செய்யப்பட்டது. தற்போது இந்திய அளவில் பலராலும் பகிரப்பட்ட ட்விட்டர் பதிவாக அது அமைந்துள்ளது. இதற்கு முன்பு ஷாருக்கானின் புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்டதாக இருந்தது. அதனை பின்னுக்கு தள்ளியது விஜய்யின் இந்த க்யூட் செல்ஃபி. #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: