தளபதி விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கி, நடித்துள்ள ஜங்ஷன் படம் அவரது யூடியூப் சேனலியில் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
Advertisment
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று சும்மாவா சொன்னார்கள். கோலிவுட்டில் தளபதி விஜய் ஒரு புறம் பயங்கர மாஸ் காண்பித்து வருகிறார். இதனை தொடர்ந்து, அவரது மகனும் தந்தையை போலவே நடிப்பில் களமிறங்கியுள்ளார்.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படம்
நடிகர் விஜய்யின் மகன், சஞ்சய் விஜய் தற்போது அமெரிக்காவில் கல்வி பயின்று வருகிறார். இவர் கல்வி பயிலும்போதே தனியாக ஒரு யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார். இந்த கேனலில் அவரே இயக்கி நடித்துள்ள “ஜன்க்ஷன்” என்ற குறும்படத்தின் 6 நிமிடங்கள் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Advertisment
Advertisements
எவ்வித பிண்ணனி இசையும் இல்லாமல், வெறும் வசனங்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தை மட்டுமே சஸ்பென்ஸாக கடக்கிறது காட்சிகள். தம்மை ரேக்கிங் செய்த ரோஹித் என்ற இளைஞரை தாக்கிவதற்காக சிறிய கத்தியை எடுத்துக் கொண்டு வரும் ஜேசன் சஞ்சய்-க்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. என்ன அது? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தான் சஸ்பென்ஸ்.