New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/e40a05ca34f9ac3b62f4472da310f007.jpg)
அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து உற்சாகமடைந்த விஜய், அதே எனர்ஜியில் கைகளை அசைத்தார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாகக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.
விஜய்யின் டான்ஸ், காமெடி, பாடி லாங்குவேஜ், ஸ்டைல் என ஒவ்வொன்றுக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.
தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ’தளபதி 63’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக இதில் நயன்தாரா நடிக்கிறார்.
கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் தினம் நூற்றுக் கணக்கான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
Exclusive : Today's Video of #Thalapathy #Vijay ❤️ From #Thalapathy63 Spot. @Thalapathy63Off #Vijay63 pic.twitter.com/eO8gwHApfT
— #Thalapathy63 (@Thalapathy63Off) 15 March 2019
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஒருபுறம் ரசிகர்களும், மறுபுறம் ரசிகைகளும் விஜய்யைப் பார்த்த ஆச்சர்யத்தில் குதூகலித்தனர்.
அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து உற்சாகமடைந்த விஜய், அதே எனர்ஜியில் கைகளை அசைத்து, புன்னகையை பரிசளித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மேலும் குதூகலமானார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.