Advertisment

விஜய்யின் தளபதி 64 படப்படிப்பு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்; படக்குழுவினர் மும்முரம்

நடிகர் விஜய்யின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பை 2020 பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக படக்குழுவினர் மும்முரமாக படப்பிடிப்பு வேலைகளை செய்துவருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Vijay, Vijay Thalapathy 64, Thalapathy 64 movie, Thalapathy 64 planning to wrap up by 2020 february, விஜய், தளபதி 64, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சந்தனு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், director Lokesh Kanagaraj, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthnu Bhagyaraj, Antony Varghese, VJ Ramya, Lintu Rony, Gouri Kishan, Thalapathy 64 latest news

இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்திற்குப் பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்காலிகமாக தளபதி 64 என பெயரிடப்பட்டுள்ள விஜய் தனது 64வது படத்தில் ஒப்பந்தமானார்.

விஜய்யின் தளபதி 64 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் படமாக்கினர். இதையடுத்து, படக்குழுவினர் அனைவரும் டெல்லியில் முகாமிட்டு பட்டப்பிடிப்பு நடத்திவருகின்றனர். இந்த நிலையில், படத்தின் ​​தயாரிப்பாளர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் தீவிரமாகவும் வேகமாகவும் இயக்கி வருகிறார். விரைவில், நடிகர் விஜய் சேதுபதி டிசம்பர் மாதம் இந்த படக்குழுவினருடன் இணைகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி டிசம்பர் முதல் செட்ஸில் இணைவார்.

2020 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக தளபதி 64 படம் உள்ளது. இந்தப் படத்தின் கதை ஒரு கல்லூரியின் பின்னணியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கிறது.

ஊழலை எதிர்த்துப் போராடும் கல்லூரி பேராசிரியர் பாத்திரத்தில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதிரடி த்ரில்ல படமாக அமையவுள்ள தளபதி 64-இல் விஜய்யுடன் மாலவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, சந்த்னு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், வி.ஜே.ரம்யா, லிண்ட்டு ரோனி, கௌரி கிஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தில் விஜய் டிவி-புகழ் பாடகி சௌந்தர்யா நந்தகுமார் மற்றும் தமன்னாவின் பெட்ரோமாக்ஸில் நடித்த பிரேம் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Actor Vijay Andrea Jeremiah Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment