Advertisment
Presenting Partner
Desktop GIF

திடீர் உடல்நலக்குறைவு : நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
அப்போ மலையாளி? இப்ப தமிழனா? வீடியோவில் சிக்கிய விக்ரம்; நெட்டிசன்ஸ் சாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது உடல்ல் குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது திரையுலக பயணத்தை தொடங்கி பாலா இயக்கததில் வெளியான சேது படத்தின் மூலம் நாயகான உயர்ந்தவர் விக்ரம். அதற்கு முன்பு தமிழ மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் பெரிய அறிமுகத்தை கொடுத்து சேது படம்தான்.

அதனைத் தொடர்ந்து, தில், காசி, ஜெமினி, சாமி, பிதாமகன், தூள் அந்நியன், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் வசூல் நாயர்கள் பட்டியலில் நுழைந்தார். சமீபத்தில் இவர் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த மகான் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியில் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பொன்னியில் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார்.

இந்நிலையில, நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நெஞ்சுவலி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், எங்களது சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை அளித்ததை தொடர்ந்து தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

publive-image

மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், தற்போது அவர் நலமுடன் இருப்பதால் விலைவில் டிஸ்சார்ஸ் செய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Vikram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment