/indian-express-tamil/media/media_files/2025/08/13/screenshot-2025-08-13-225610-2025-08-13-22-56-31.jpg)
சிறு பிரச்னைகள் முரண்பாடுகளுக்குக் கூட கப்புல் கவுன்சிலிங், சைக்காலஜிக்கள் தெரபி, அவை தொடர்பான புத்தகங்கள் மற்றும் மொபைல் ஆப்-கள், விவாகரத்து என வேகவேகமாக நவீன தலைமுறை எடுக்கும் 'அவசர முடிவுகளை' விமர்சிக்கிறது படம். அதேநேரம், மொத்தமாகவும் அவற்றைப் புறந்தள்ளாது, அவற்றின் 'சிறிய' தேவையும் பலனையும் சுட்டிக்காட்டுகிறது.
தம்பதிகளுக்கு இடையிலான அன்பு, விட்டுக்கொடுத்தல், இணையரின் சுயமரியாதையைப் பேண வேண்டிய பொறுப்பு, சிறு சண்டைகளையும் ஊடல்களையும் அணுகும் முறை போன்றவற்றை விவாதிக்கிறது.
மேலும், திருமண பந்தத்தை மிகவும் ரொமான்டிசைஸ் செய்யவோ, மிகைப்படுத்தி பயமுறுத்தவோ செய்யாமல், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், சமாதானங்கள், அரவணைப்புகள் என ஆனந்தமாக அணுகச் சொல்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியான அர்ஜுனுக்கும் (ஶ்ரீ) திவ்யாவிற்கும் (சானியா ஐய்யபன்) இடையே இருந்த காதல் கரைந்து, சண்டைகள் அதிகரிக்கின்றன.
ஏற்பாட்டுத் திருமண செய்துகொண்ட தம்பதியான ரங்கேஷிற்கும் (விதார்த்) பவித்ராவிற்கும் (அபர்ணதி) ஒரு குழந்தை உள்ளது. பவித்ரா தனது உடல்பருமனைக் குறைக்காததால், விவாகரத்துப் பெற்று அவரிடமிருந்து விலகும் முடிவை எடுக்கிறார் ரங்கேஷ்.
சைக்காலஜிஸ்ட்டான மித்ராவும் (ஷ்ரதா ஶ்ரீநாத்), அவரது கணவர் மனோவும் (விக்ரம் பிரபு) சண்டைகளே இல்லாமல் தங்கள் திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
அர்ஜுன்-திவ்யா, ரங்கேஷ்-பவித்ரா தம்பதிகளின் பிரச்னை தன்னிடம் வரவே, அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு இடையிலான பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் மித்ரா.
பின்னர் அதற்கான ஆலோசனைகளை முன்வைக்கிறார். மித்ராவின் வேலையே மனோ-மித்ரா தம்பதியின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் நிகழக் காரணமாகிறது.
இம்மூன்று தம்பதிகளின் பிரச்னைகள் என்ன என்பதையும் இறுதியில் அவர்கள் அவற்றிலிருந்து மீண்டார்களா என்பதையும் இறுகப் பற்றிப் பேசுகிறது இந்த 'இறுகப்பற்று'.
இந்த படத்தை பற்றி பேசுகையில் இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு கிட்ட தட்ட 38 விவாகரத்து கேஸ்கள் கைவிடப்பட்டுள்ளது என்று விக்ரம் பிரபு ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இந்த படத்தின் வெற்றி இது தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருமண உறவில் காதல் குறைந்து பிரிவு வரை செல்லும் இன்றைய தம்பதிகளுக்கு, `பிரியுறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்... சேர்ந்திருக்குறதுக்கு ஒரு காரணம் இருந்தாலும் இறுக்கமா பிடிச்சுக்கங்க!' என்று கியூட் மெஸேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன் க்ளைமாக்ஸ் மெஸேஜ் நம் மண்டைக்குள் சுழல்வதுதான் இப்படத்தின் வெற்றி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.