நடிகர் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் துப்பாக்கி முனை படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விக்ரம் பிரபுவின் 12வது படமான ‘துப்பாக்கி முனை’யில், ஹீரோயினாக ஹன்சிகா நடிக்கிறார். இந்தப் படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் மணிரத்னத்திடம் அசோசியேட்டாகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். என்கவுண்டர் போலீஸாக இந்தப் படத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு. அவர் சந்திக்கும் ஒரு வழக்கு, அவரது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது.
துப்பாக்கி முனை பாடல்கள் ரிலீஸ்
வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘துப்பாக்கி முனை’ படத்துக்கு தணிக்கை குழுவினர் யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். எஸ்.வி.முத்துகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதனை நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
November 2018
இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் சில பிண்ணனி இசையும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்களும் ராகா இணையத்தில் வெளியாகியுள்ளது.
November 2018