Advertisment

மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் நடிக்க தேர்வான விக்ரம்; வாய்ப்பை இழந்து 2 மாதங்கள் அழுத சீயான்!

நடிகர் விக்ரம் சமீபத்தில் மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் இறுதி தேர்வின் போது தவறு செய்ததாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vikram Bombay

மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இறுதி தேர்வின் போது தவறு செய்ததாகவும் பகிர்ந்து கொண்டார்.

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ரூ.100 வசூலைத் தாண்டியுள்ள நிலையில், நடிகர் விக்ரம் சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் இறுதி தேர்வின் போது தவறு செய்ததாகவும் பகிர்ந்து கொண்டார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vikram recalls crying for two months after losing Mani Ratnam’s Bombay to Arvind Swamy: ‘I was confirmed, but I goofed up’

நடிகர் விக்ரம், மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான 1995-ம் ஆண்டு பம்பாய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அரவிந்த் சுவாமியிடம் முக்கிய கதாபாத்திரத்தை இழந்ததை நினைவு கூர்ந்தார்.

நடிகர் விக்ரம் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்த தங்கலான படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்.  நடிகர் விக்ரம் சமீபத்தில், சமீபத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் காதல் படமான பம்பாய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த வேதனையான நினைவை மீண்டும் நினைவு கூர்ந்தார். சித்தார்த் கண்ணனுடனான உரையாடலில், “சியான்” விக்ரம் முதலில் பம்பாய் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், இறுதித் தேர்வின் போது தவறு செய்ததாகவும் தெரிவித்தார். இறுதியில் அந்த பாத்திரம் அரவிந்த் சுவாமிக்கு சென்றது.

நடிகர் விக்ரம் பம்பாய் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படும் வதந்திகள் பற்றிக் கேட்டபோது, ​​“நான் பம்பாய் படத்தில் நடிக்க மறுக்கவில்லை, திடீரென்று என்னை ஆடிஷன் செய்யச் சொன்னதால், வீடியோ கேமிரா கிடைக்காததால், ஆடிஷனை தவறவிட்டுவிட்டேன். அவருக்கு ஒரு ஸ்டில் கேமிராதான் கிடைத்தது. 

அவர் நடிக்க கூறினார், அந்த பெண் ஓடுகிறாள் பாருங்கள், நான் ஃபிரீஸ் ஆகிவிட்டேன். அவர், நிறுத்தாதீர்கள், தொடருங்கள், ஆனால் நான் குழம்பினேன், அவரிடம் கேமிரா உள்ளது, அது வீடியோ கேமிரா அல்ல, நான் ஏன் நடிக்கனும்?' நான் நகர்ந்தால் அவருக்கு மங்கலான இமேஜ் வந்துவிடும் என்பதை நான் அப்போது புரிந்துகொண்டேன்.” என்று கூறினார்.

நடிகர் விக்ரம் பம்பாய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பின், இரண்டு மாதங்கள் எப்படி அழுதார் என்பதையும் நினைவு கூர்ந்தார். “மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு ஓய்வு எடுக்கத் தயாராக இருந்தேன்; அதன் பிறகு, எனக்கு எதுவும் தேவைப்படவில்லை. அந்த படத்துக்கு நான் உறுதியாகிவிட்டேன். காலை மனிஷா கொய்ராலாவின் போட்டோஷூட் மற்றும் மாலை என்னுடையது. ஆனால், நான் அதை சிக்கலுக்குள்ளாக்கிவிட்டேன். இரண்டு மாதங்கள், ஒவ்வொரு நாளும், நான் எழுந்து அழுதேன், 'சிட் நான் அந்த படத்தை இழந்துவிட்டேன்.' ஒரு வளர்ந்த மனிதன் இரண்டு மாதங்கள் அழுதான். அந்த படம் பான்-இந்தியா மற்றும் ஒரு கல்ட் படமாக மாறியது” என்று அவர் கூறினார்.

முதலில் பம்பாய் படத்தில் நடிக்க முடியாமல் போனாலும், மணிரத்னத்துடன் பணிபுரியும் விக்ரமின் கனவு இறுதியில் நனவாகியது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் திரைப்படத்தில் ராவணனாக நடித்தார். பொன்னியின் செல்வன்: I மற்றும் II-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தனது கனவு இயக்குனருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கும் விக்ரம், “நான் சபதத்தை முடித்தேன், அதன் பிறகு, மணி சாருடன் இரண்டு படங்கள் செய்தேன்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vikram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment