Advertisment

மணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்... ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor vikram, நடிகர் விக்ரம்

actor vikram, நடிகர் விக்ரம்

இயக்குநர் மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் கதை கரு படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisment

சமீபத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண்விஜய், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மணிரத்னம் படத்தில் நடிகர் விக்ரம்

இதற்கடுத்து 'பொன்னியின் செல்வன்' நூலை மையமாக வைத்து, மணிரத்னம் புதிய படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது அவரது நெடுங்கால ஆசை எனவும் சொல்லப்பட்டது.

இதில் விஜய், விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இயக்குநர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சில தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணி ரத்னமும் விக்ரமும் ஏற்கனவே 'ராவணன்' படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Maniratnam Chiyaan Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment