Advertisment

மஹாவீர் கர்ணா அவதாரம் எடுத்த சியான் விக்ரம்... ஷூட்டிங் தொடங்கியது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahaveer karna, விக்ரம்

mahaveer karna, விக்ரம்

கடாரம் கொண்டான் படத்தின் வேலைகள் முடிவடைந்த பின்னர் மஹாவீர் கர்ணா படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் சியான் விக்ரம்.

Advertisment

சுமார் 300 கோடி ரூபாய் செலவில் மலையாள இயக்குநர் ஆர்.எஸ். விமல் உருவாக்கத்தில் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் படம் தான் மஹாவீர் கர்ணா.

விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படப்பிடிப்பு தொடக்கம்

இந்த படத்தின் தமிழாக்கத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரம் இல்லாத பிற நடிகர் நடிகைகளின் காட்சிகளைப் படக்குழு இதுவரைப் படமாக்கி வந்தது. இந்நிலையில் கடாரம்கொண்டான் பட வேலைகளை முடித்துள்ள அவர் இப்போது கர்ணா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

actor vikram, விக்ரம்

இது பற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஆர்.எஸ். விமல், “கடைசியாக அந்த நாள் வந்துவிட்டது. தொடங்கியது மகாவீர் கர்ணா. தலைசிறந்த நடிகரான சீயான் விக்ரமுக்கு முதன்முறையாக ஆக்‌ஷன் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நன்றி கடவுளே” என்று பதிவிட்டிருக்கிறார்.

Tamil Cinema Chiyaan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment