Advertisment

நான் சாமி இல்ல... பூதம்!!! சாமி 2 டிரெய்லர் வெளியீடு!

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ஹரி தயாரிப்பில் ‘சாமி 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saamy 2

saamy 2

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாமி 2’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்தப் படத்தை ஷிபு தமீம் தயாரித்துள்ளார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

Advertisment

சுமார் 1 நிமிடம் 59 வினாடிகள் நீடிக்கும் இந்த டிரெய்லரில், பாடி பில்டர் போல காட்சியளிக்கிறார் விக்ரம். டிரெய்லரின் முதல் தொடக்க ஷாட்டில், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் இந்தியா கேட் தோன்ற எண்ட்ரி கொடுக்கிறார் சியான் விக்ரம். விருவிருப்பான சண்டைக் காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா வில்லன் கெட்டப்பில் நடிக்க, விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். காமெடி ரோலில் களமிறங்கியுள்ளார் பரோட்டா சூரி.

பிற கதாப்பாத்திரங்களில் நடிகர் பிரபு, ஜான் விஜய், ஐஷ்வர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். 2003 ம் ஆண்டு வெளியான முதல் பாகம் ‘சாமி’ படத்தில், ‘ஒரு சாமி, இரண்டு சாமி, ..... ஆறுசாமி’ என்ற வசனம் பெரிய ஹிட். அதே போலவே இந்தப் படத்திலும் வசனங்கள் அமைந்துள்ளது.

இன்று வெளியான டிரெய்லரில், ‘நான் தாய் வயிற்றில் பிறக்கல, பேய் வயிற்றில் பிறந்தேன்’ மற்றும் ‘நான் சாமி இல்ல...பூதம்’ என்ற இரண்டு பன்ச் டயலாக் உள்ளது. முழுக்க முழுக்க வட இந்தியா இடங்கள் இந்த டிரெய்லரில் தோன்றுவதால், இப்படத்தின் கதை டெல்லியில் நடைபெறும் ஒன்றாக அமைந்துள்ளது தெரிகிறது.

‘சாமி 2’ டிரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 2 லட்சத்து 98 ஆயிரத்து 188 பேர் பார்த்துள்ளனர்.

Saamy 2 Hari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment