New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Vimalup.jpg)
Actor Vimal Venkatesan statement about Bigg Boss gone viral Tamil News
Actor Vimal Venkatesan statement about Bigg Boss இதனைத் தொடர்ந்து 'விஜய் டிவியுடன் தொடர்பில் இருப்பவர்கள் மட்டும்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற முடியுமா' என்கிற விவாதங்கள் ஆரம்பமாகியிருக்கின்றது.
Actor Vimal Venkatesan statement about Bigg Boss gone viral Tamil News
Vimal Venkatesan statement about Bigg Boss gone viral Tamil News : 'கங்கா', 'பிரியாத வரம் வேண்டும்' ஆகிய சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த விமல் வெங்கடேசன், பிக் பாஸ் பற்றி கூறியிருக்கும் ஸ்டேட்மென்ட் தற்போது வைரலாகி வருகிறது.
இப்பொழுதெல்லாம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களோடு உரையாடுவது மிகவும் எளிதாகிவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு விடையளித்து வந்த விமலின் பதில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"உங்களை பிக் பாஸ் 5-ல் பார்க்கவேண்டும். அது முடியுமா?" என்ற கேள்விக்கு, "நிறையப் பேர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். உண்மையில் விஜய் டிவியிலிருந்து தனிப்பட்ட முறையில் யாரையும் எனக்குத் தெரியாது" என விமல் கூறிய இந்த பதில் ரசிகர்களைக் குழப்பமடைய வைத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 'விஜய் டிவியுடன் தொடர்பில் இருப்பவர்கள் மட்டும்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற முடியுமா' என்கிற விவாதங்கள் வலைத்தளங்களில் ஆரம்பமாகியிருக்கின்றது. ஏற்கெனவே நகுல், அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்கள் பிக் பாஸ் சென்றால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், விமல் வெங்கடேசனின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.