சர்கார் விஜய்க்கு சிகரெட் போல் அயோக்யா விஷால்-க்கு பீர் பாட்டில்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayokya first look poster, அயோக்யா

ayokya first look poster, அயோக்யா

இரும்புத்திரை படத்திற்கு அடுத்ததாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்க இருக்கும் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Advertisment

கடந்த மே மாதம், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத் திரை படத்தில் போலீஸ் ஆபிசராக நடித்துள்ள விஷால் தற்போது மீண்டும் அதே கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். இயக்குநர் மித்ரனின் நண்பரான வெங்கட் மோகன் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

அயோக்யா படம் போஸ்டர் சர்ச்சை

இயக்குநர் மித்ரன் முதன்முறையாக் நடிகர் விஷாலை இயக்குகிறார். இப்படத்திற்கு அயோக்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் நேற்று இரவு வெளியானது. இப்போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சர்ச்சைக்குள்ளானது. அதற்கு காரணம் விஷால் கையில் வைத்திருக்கும் பீர் பாட்டில்.

Advertisment
Advertisements
November 2018

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர், படக்குழு அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்கினர். இந்நிலையில், சர்ச்சை ஏற்பட்டு வைரலாக வேண்டும் என்ற நோக்கில், விஷாலின் அயோக்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கில் மது பாட்டிலுடன் விஷால் காட்சி தருகிறார்.

படத்தில் மது மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற கூடாது என்ற விதிமுறை இருந்தும் போஸ்டரிலேயே பீர் பாட்டிலை விஷால் வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tamil Cinema Vishal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: