Advertisment

வழக்கை தாமதப்படுத்திய நடிகர் விஷாலுக்கு ரூ500 அபராதம்… நீதிமன்றம் கண்டனம்

விஷால் தனது நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்தாததற்காக சென்னை மண்டல ஜி.எஸ்.டி பிரிவு, தொடர்ந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக விஷாலைக் கண்டித்த நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Actor Vishal condemned by court, vishal chided by court, vishal imposed fine rs 500 by court over delays case, வழக்கை தாமதப்படுத்திய நடிகர் விஷால், நடிகர் விஷாலுக்கு ரூ500 அபராதம் நீதிமன்றம் கண்டனம், விஷால், ஜிஎஸ்டி வரி வழக்கு, Vishal, tamil news, tamil nadu news, GST case

நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தனது நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்தாததற்காக சென்னை மண்டல ஜி.எஸ்.டி பிரிவு, அவரது நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் நடிகர் விஷாலைக் கண்டித்துள்ளது.

Advertisment

நடிகர் விஷாலுக்கு 2016 முதல் 2018 வரை ஜிஎஸ்டி சென்னை மண்டலப் பிரிவினால் குறைந்தது 10 சம்மன்கள் அனுப்பப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், இந்த விவகாரம் தொடர்பாக ஜி.எஸ்.டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் இந்த வழக்கில் ஆஜராகாதது மட்டுமில்லாமல் விசாரணையை சீர்குலைத்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் தவறான நோக்கத்தை காட்டுகிறது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தாக்கல் செய்த பின்னர் விஷால் இணங்கி வந்துள்ளார் என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, மிகவும் குறைந்த தண்டனை போதும் என்று கூறி அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.

நடிகர் தவறிழைத்திருக்கிறார் என நிரூபிக்கப்பட்டு, 500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி, வழக்கு நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதற்காக நடிகர் விஷாலுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்.

“அவர் பல வேலைகளில் ஈடுபட்டுள்ள மிகவும் பிஸியான நபர் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் நீதித்துறை நடவடிக்கைகளின் கீழ் அதிகாரிகளால் வழங்கப்பட்ட சம்மன்களுக்கு இணங்குவதற்கும் அவர்களுடன் ஒத்துழைப்பதற்கும் அவருக்கு பொறுப்பு உள்ளது. ஆனால், இந்த புகாரில் சம்மன் அனுப்புவதற்கு அவர் புகார்தாரர் முன் விசாரணைக்கு ஆஜராக முயற்சிக்கவில்லை என்பதை சூழ்நிலைகள் காட்டுகின்றன” என்று நீதிபதி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment