scorecardresearch

கங்கனாவை பகத்சிங்குடன் ஒப்பிட்ட விஷால்

அன்பார்ந்த கங்னாவிற்கு, உங்களின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். எது சரியோ அதற்கு நீங்கள் குரல் கொடுக்க சிறிதும் தயங்கியதே இல்லை என புகழாரம்

Another complaint against Kangana Ranaut over tweet on Mumbai police

Actor Vishal praises Kangana Ranaut : மும்பை மற்றும் மகாராஷ்ட்ரா பற்றி நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையாக பேசியிருந்தார். மேலும் அதிக அளவில் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இதனைத்  தொடர்ந்து சிவசேனா கட்சியினருக்கும் நடிகை கங்கனா ரணாவத்திற்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. மும்பை அவ்வளவு பாதுகாப்பற்றது என்று நினைத்தால் நீங்கள் உங்களின் சொந்த மாநிலத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்று கூறினர் சிவசேனா கட்சியினர். 9ம் தேதி நான் மும்பைக்கு வருவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விடுத்திருந்தார். அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பாதுகாப்பு வழங்கியிருந்தது.

மும்பையில் கங்கனா ரணாவத் வசித்திருந்த குடியிருப்பு பகுதியில் பல்வேறு கட்டிடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தது என்று மும்பை மாநகராட்சி அப்பகுதிகளை இடித்து தள்ளியது. இதற்கு பல்வேறு பக்கத்தில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. ஏற்கனவே நாட்டின் பொருளாதாரமும் வேலையில்லா திண்டாட்டமும் பெருகி வருவதை மறைக்க ஏதேதோ நாடகங்கள் அரங்கேறுகிறது என்று பலரும் தங்களின் நியாயமான வேதனையையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், அன்பார்ந்த கங்னாவிற்கு, உங்களின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். எது சரியோ அதற்கு நீங்கள் குரல் கொடுக்க சிறிதும் தயங்கியதே இல்லை. உங்களின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை இது. அரசின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டே நீங்கள் வலிமையாகின்றீர்கள். உங்களின் இந்த காரியம் 1920களில் பகத்சிங் செய்த செயல்களுக்கு ஒப்பானது. உங்களுக்கு என் வாழ்த்துகள். தலைவணங்குகிறேன் ட்வீட் வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor vishal praises kangana ranaut

Best of Express