Advertisment

வரலட்சுமியின் நிச்சயதார்த்தம்- வெளிப்படையாக விஷால் சொன்ன பதில்

ரத்னம் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஷாலிடம் வரலட்சுமிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vishal Varalaxmi

Vishal

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடிபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்ட கோழி 2’, ‘சர்கார்’, ‘மாரி 2’, ‘இரவின் நிழல்படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக தெலுங்கில் வெளியான ஹனுமான்படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன்படத்தில் நடித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் - மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் கடந்த மார்ச்1 அன்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வரலட்சுமியின் 14 வருடகால நண்பர்.

varalakshmi

நிகோலய் கலிபோர்னியாவைச் சேர்ந்த கவிதா என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். கவிதா-நிகோலய் தம்பதிக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. மும்பையில் தங்களது குடும்பத் தொழிலாக ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார் நிகோலய்.

இந்நிலையில் ரத்னம் படத்தின் புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் விஷாலிடம் வரலட்சுமிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு விஷால், ’வரலட்சுமியை நினைச்சு ரொம்பவே சந்தோஷப்படுறேன். தெலுங்கு திரையுலகில் அவருக்கு நல்லமார்க்கெட் உருவாகி இருக்கிறது. திமிரு திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கேரக்டரை பார்த்து மெய்சிலிர்த்து போன எனக்கு, அதன்பின்னர் ஹனுமன் படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் மெய்சிலிர்க்க வைக்கும்படி இருந்தது. அவர் கெரியரை தாண்டி அவரது வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல இருப்பது சந்தோஷம் தான்என விஷால் பேசி இருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment