/indian-express-tamil/media/media_files/FVS8HlxUFgXgMhG3zk3t.jpg)
விஷாலுக்கு கல்யாணமா? எப்போது தெரியுமா? அவரே கொடுத்த அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார். ஒரு சிலர் இவர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக விமர்சித்தனர். இதனால் பெரிதும் உடைந்தார்.
சமீபத்தில், விழுப்புரத்தில் நடந்த திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது மேடையில் நின்றுகொண்டிருந்த விஷால் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியபடி விஷாலை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான் அப்படியானதாக கூறப்பட்டது. ஆனால், விஷால் குடித்துவிட்டு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று சிலர் கூறி விமர்சித்து வந்தனர்.
ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் நான் அப்படி காணப்பட்டேன். நான் குடிப்பதையும் புகைப்பிடிப்பதையும் நிறுத்தி பல வருடங்களாகிறது என்று கூறியிருந்தார். விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் "நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆக.15 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு அடுத்து என்னுடைய திருமணம் நடக்கும். பெண் பார்த்தாச்சு, எல்லாம் பேசி முடிச்சாச்சு, இது ஒரு காதல் திருமணம் தான்" என தெரிவித்துள்ளார். ஆக.29 ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் திருமணம் பற்றி அறிவிப்பேன். என்னுடையது காதல் திருமணமாக இருக்கும், செப்டம்பர் மாதம் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்று விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us