மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளிலும், வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்தது. திரும்பும் இடமெல்லாம் மழை நீர் தேங்கியுள்ளது. பலப் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது மழை படிப்படியாக குறைந்து வருவதால் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மழை பாதிப்பு குறித்து நடிகர் வீடியோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். மழை வந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும். சாலையில் தண்ணீர் தேங்க ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் புகத் தொடங்கும். நான் அண்ணா நகரில் இருக்கிறேன். என் வீட்டுக்குள்ளேயும் 1 அடிக்கு தண்ணீர் வந்து விட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்த போது, எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.
8 ஆண்டுகளுக்கு பிறகும் அதைவிட மோசமாக இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் வடிகால் திட்டத்தை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்தது. அந்த திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இது ஒரு கோரிக்கை தான். ஒரு வாக்காளராக கேட்கிறேன், நடிகனாக அல்ல.
சென்னை தொகுதி எம்.எல்.ஏ-க்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ-க்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
— Vishal (@VishalKOfficial) December 4, 2023
இருட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருப்பார்கள், மூத்த குடிமக்கள் இருப்பார்கள். என் வீட்டிலும் என் அப்பா, அம்மா இருக்கிறார்கள். பயந்து போய் உள்ளனர். இது பொதுவான பிரச்சனை. அரசியல் சார்ந்தோ, வேறு எந்த குற்றச்சாட்டும் அல்ல. இன்று எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதை ஒரு தர்ம சங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். இதற்கு பெரு நகர சென்னை மாநகராட்சி, ஆணையர், அரசு ஊழியர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி கட்டுகிறோம்.
எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள்.வந்து உதவுங்கள்" எனப் பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.