இந்தியாவில் புகழ்பெற்ற புன்னிய ஸ்தலங்களில் ஒன்றான வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலை மேம்படுத்தியதற்காக நடிகர் விஷால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வீரமே வாகை சூடும். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஷால் லத்தி மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் தானே இயக்கி நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்ற விஷால், இந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கங்கை நிதியை தூய்மைபடுத்தும் பணிகளை செய்து முடித்துள்ளார்.
தற்போது காசி விஸ்வநாதர் கோவிலக்கு சென்றிருந்த விஷால் இந்த கோவில் மற்றும் கங்கை நதியை தூய்மைபடுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
அன்புள்ள மோடிஜி , நான் காசிக்குச் சென்று, அற்புதமான தரிசனம்/பூஜை செய்து, கங்கா நதியின் புனித நீரைத் தொட்டேன் . கோயிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாகவும் எவரும் வகையில் காசி தரிசனம் செய்வதன் மூலம் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக . உங்களை தலைவணங்குகிறேன். வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த பதிவுக்கு பாஜக மற்றும் விஷால் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“