இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் ஸ்பீடு இயக்குனர் என்று அழைக்கப்படும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்தால் ரத்னம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியான நிலையில், தமிழகத்தின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் ரத்னம் படம் வெளியாகவில்லை. முன்னாக நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடிகர் விஷால் ரத்னம் படம் வெளியீட்டுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், விஷால் குறிப்பிட்ட ஏரியாவை தவிர மற்ற இடங்களில் படம் வெளியாகியுள்ளது.
விஷால் நடித்துள்ள 'ரத்னம்' திரைப்படம் திருச்சி-தஞ்சாவூர் பகுதியில் வெளியாகவில்லை. திருச்சி-தஞ்சாவூர் நாடக சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், படத்தின் மீது சங்கம் நடவடிக்கை எடுத்து, படத்தை தங்கள் பகுதியில் வெளியிட தடை விதித்துள்ளனர். இது படத்திற்கு கடைசி நிமிட பிரச்சனையாக இருந்ததால் விஷால் அதிர்ச்சியடைத்த நிலையில், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
And finally #kattapanchayath is up and going without any fear or remorse which means that Tamil cinema and Tamil cinema producers in particular are in for a rollercoaster ride this year. Dearest executive members of #TTAREA theatre association u hav created a very big impact by…
— Vishal (@VishalKOfficial) April 26, 2024
"இறுதியாக எந்த பயமும் வருத்தமும் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து முன்னேறி வருகிறது, தமிழ் சினிமாவும் குறிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் இந்த ஆண்டு ரோலர்கோஸ்டர் பயணத்தில் உள்ளனர். அன்பான நிர்வாக உறுப்பினர்கள் திருச்சி தஞ்சாவூர் தியேட்டர் அசோசியேஷன், நீங்கள் கங்காரு நீதிமன்றங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளீர்கள். ஆனால் என்னை போன்ற போராளிகளை வீ்ழ்த்த முடியாது. சற்று தாமதமானாலும் நிச்சயம் உங்களை நீதியின் மூலம் வீழ்த்துவேன்
எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. மேலும் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்குக்காக எடுப்பது அல்ல. தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இங்கு வந்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றி. நீங்கள் தயாரிப்பாளருகளுக்காக பல சங்கங்கள் வைத்திருப்பது உங்கள் அனைவருக்கும் அவமானம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.