Ayogya Release Date : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (10.5.19) திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட விஷாலின் ’அயோக்யா’ திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சண்டக்கோழி-2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் தான் அயோக்யா.ஏ.ஆர் முருகதாசின் உதவியாளரான வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுக ஆகியுள்ளார். கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
படம் குறித்த எதிர்பார்ப்பும் விஷால் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில், முதலில் அயோக்யா திரைப்படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு விஷாலின் நிச்சயார்த்த தேதி அறிவிக்கப்பட்டதால் படத்தின் ரீலீஸ் தேதி தள்ளிபோனது. இறுதியில் அயோக்யா திரைப்படம் மே 10 ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
Upcoming Tamil Movie 'Ayogya' Release Geta Postponed: அயோக்யாவிற்கு தடை!
போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கின. இன்று காலை காட்சிக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடம் எதிர்பார்த்திருந்தனர். சில திரையரங்குகள் முன்பு விஷால் ரசிகர் மன்ற ரசிகர்கள் மேள தாளத்துடன் காத்திருந்தனர். இறுதியில் படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அயோக்யா படம் இன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் 5 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், அதை அளித்தால் மட்டுமே அயோக்யா திரைப்படம் வெளியிட அனுமதிக்க முடியும் என்று தென்னிந்திய திரைப்பட சங்கம் படம் வெளியாவதற்கு தடை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தலைவரின் படமே குறித்த நேரத்தில் வெளியாகமல் போனது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
” அயோக்யா' படத்துக்காக கடுமையாக உழைத்து, அதன் வெளியீட்டுக்காக காத்திருந்தேன். நடிகரைத் தாண்டி என்னால் இயன்ற அளவுக்கு என்ன பண்ண வேண்டுமோ பண்ணினேன். குழந்தை என் மடிக்கு வரும்போது அதை நன்றாகவே பார்த்துக்கொண்டேன். இது போதாதா? என்னுடை நேரம் சீக்கிரம் வரும். என்னுடைய பயணம் தொடரும்”என்று கூறியுள்ளார்.